Friday, July 21, 2017

E-Learning

இனையவழிக்கற்றல்(E-Learning) என்பது இணையத்தின் மூலமாக கற்றல்செயற்பாட்டினை மேற்கொள்வதாகும்.இதற்காக பிரத்யோகமாக இணையத்தளங்கள் (Websites) வடிவமைக்கப்படுகிறது.                                                                                                           

  இணையவழிக் கற்றலுக்கென உள்ள சில பிரத்யோகமான இணையத்தளங்கள்:-
  •                   Coursera
  •                    W3 Schools
  •                    TedEd
  •                   Codecademy
  •                    Open culture
  •                   Khan Academy
  •                    Open Yale courses
  •                   Academic Eath


E-Learning மூலமாக மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.கற்றல் நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும்போது E-Learning Website மூலம் தேவையான குறிப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.குறிப்பேடுகள்,புத்தகங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற தேவை இல்லாது போகிறது.மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் தமது கற்பித்தல் செயற்பாடுகளுக்காக E-Learning Websiteஐ பயன்படுத்த முடியும்.

Keyboard

விசைப்பலகை கணனிக்கு தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புற கருவியாகும்.விசைப்பலகையில் எழுத்துக்கள்,எண்கள்,குறிகள், கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும்.தேவைக்கேற்ப விசைகளை தட்டுவதன் மூலம் கணனிக்கு உள்ளீடுகளை வழங்கலாம்.
            தமிழ்மொழிக்கான விசைப்பலகையாக தமிழ்99 தமிழ்நாடு அரசின் ஏற்பு பெற்ற தமிழ்மொழிக்கான தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை ஆகும்.ரெங்கநாதன் விசைப்பலகை இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை ஆகும்.இலங்கையில் ICTA நிறுவனத்தினால் தமிழுக்காக நியமப்படுத்தப்பட்டுள்ள விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது ஒருங்குறியிலேயே எழுத்துக்கள் அமையும்.

            விசைப்பலகையில் தட்டச்சு செய்வனவற்றை முறையாக கணனியில் பதிவுசெய்வதற்கு Keyboard driver என்ற மென்பொருள் பயன்படுத்தப்படும் மென்பொருளை நிறுவி நாளாந்தம் பயன்படுத்தும் விசைப்பலகையை பயன்படுத்தி கூட தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்யலாம்.

Wednesday, July 19, 2017

Unicode


Unicode  அல்லது ஒருங்குறி என்பது எழுத்துக்களையும்,வரியுருக்களையும் கணித உபகரணங்களில் பயன்பத்வதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமமே ஆகும்.இன்று உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளது.

  •             தமிழ்
  •             சிங்களம்
  •             இந்தி
  •           மலையாளம் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம

மிழிற்கு என 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றில் தமிழ் உயிர்எழுத்துக்கள்,மெய் எழுத்துக்கள்,இலக்கங்கள்,கொம்பு,விசிறிகள் மற்றும் ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ,ஸ ஆகிய கிரந்த எழுத்துக்கள் உள்ளடக்கப்பகின்றன. Unicode ல் தட்டச்சு செய்யும்போது Unicode Font அவசியம்.


Unicodeல் தட்டச்சு செய்து அனுப்புவதினால் Font மாற்றம் ஏற்படும் என்ற பிரச்சினையின்றி இலகுவாக படித்துக்கொள்ள முடியும்.தற்போதுள்ள பெரும்பாலான கணனிகளில் இந்நியம முறையை செயற்படுத்த முடியும். Windows XP க்கு பின்னர் வந்த எல்லா Windows பதிப்புக்களிலும் மற்றும் இன்று பயன்பாட்டிலுள்ள Linux இயங்குதளங்களிலும் வாசிக்கலாம்.இவற்றுக்காக தனியாக Font சேர்க்கவேண்டிய அவசியமில்லை.

வழமையாக தமிழில் மின்னஞ்சல்களை அனுப்பும்போது பெறுபவரின் கணனியில் குறித்த இருத்தல் வேண்டும்.ஆனால் Unicodeல் தட்டச்சு செய்யப்பட்டால் அவ்வாறான கஷ்டங்கள் இல்லை. Unicodeல் தட்டச்சு செய்யப்படும் எழுத்துக்கள் கணனித்திரையில் பார்க்கும் ஒழுங்கில் பதியப்பட்டிருக்காது.உயிர்,மெய் புணர்தலின் பிரகாரம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.ஒரு சொல்லை அழிக்கும்பொழுதும் புணர்ச்சி அடிப்படையிலேயே எழுத்துக்கள் இல்லாதுசெய்யப்படும்.உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டுமுறை இன்று பிரபல்யம் அடைந்து வருகிறது

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்


                  இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்னும் பதத்தினை விடுத்து பார்க்க முடியாது.அந்தளவிற்கு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது. மனிதன் தோன்றிய யுகத்திலிருந்து இன்றுவரை தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பல்வேறு தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தி வந்துள்ளான்.அந்தவகையில் இன்றைய யுகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்னும் முறைமை அவசியமாகிறது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பதனுள் தகவல்,தொடர்பாடல் ஆகிய 2 தொழில்நுட்பங்களும் காணப்படுகிறது.இன்றைய நவீன யுகத்தில் தகவல் தொழில்நுட்பமானது பல்வேறு விதமாக செயற்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது கணனிகளுடன் தகவல்களை ஒருங்கமைப்புச் செய்தல், கணனியியல்,இலத்திரனியல்,தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெறப்படும் தகவல்களை ஓர் செயன்முறைக்குட்படுத்தி பரிமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை ஒன்றிணைத்ததாகும்.

​தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது தொடர்பாடல் சாதனங்களை செயற்படுத்தல்,பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றிற்கான அறிவு தொடர்பாடல் தொழில்நுட்பம் எனப்படும்.ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தகவல்களை கடத்துவதற்கு தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தும் முறையே தொடர்பாடல் தொழில்நுட்பமாகும் என விரிவுபடுத்தலாம்.