இன்றைய உலகில்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்னும் பதத்தினை விடுத்து பார்க்க
முடியாது.அந்தளவிற்கு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது. மனிதன் தோன்றிய
யுகத்திலிருந்து இன்றுவரை தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பல்வேறு தொடர்பாடல் முறைகளை
பயன்படுத்தி வந்துள்ளான்.அந்தவகையில் இன்றைய யுகத்தில் தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்பம் என்னும் முறைமை அவசியமாகிறது.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பதனுள் தகவல்,தொடர்பாடல்
ஆகிய 2 தொழில்நுட்பங்களும் காணப்படுகிறது.இன்றைய நவீன யுகத்தில் தகவல்
தொழில்நுட்பமானது பல்வேறு விதமாக செயற்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது
கணனிகளுடன் தகவல்களை ஒருங்கமைப்புச் செய்தல்,
கணனியியல்,இலத்திரனியல்,தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
பெறப்படும் தகவல்களை ஓர் செயன்முறைக்குட்படுத்தி பரிமாற்றம் செய்தல் போன்ற
செயற்பாடுகளை ஒன்றிணைத்ததாகும்.
தொடர்பாடல்
தொழில்நுட்பம் என்பது தொடர்பாடல் சாதனங்களை செயற்படுத்தல்,பராமரித்தல்
மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றிற்கான அறிவு தொடர்பாடல் தொழில்நுட்பம்
எனப்படும்.ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தகவல்களை கடத்துவதற்கு
தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தும் முறையே தொடர்பாடல் தொழில்நுட்பமாகும் என
விரிவுபடுத்தலாம்.
No comments:
Post a Comment